கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் 4-ஆவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி கடந்த வியாழக்கிழமை 13 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. தொடர்ந்து வௌ;ளிக்கிழமை 8 இடங்களிலும், சனிக்கிழமை 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், தங்கம், வைர நகைகள்; கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்; படுகிறது. இதைத் தொடர்ந்து நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக இன்று 4-ஆவது நாளாக செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



