Show all

சீமான் முதலாவதாக அறிவிப்பு! திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்டி

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரும்பாலான கட்சிகள் களம் இறங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வரப்போகும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலாவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுவரை எந்த இடைத்தேர்தல்களிலும் இல்லாத ஒரு பரபரப்பு வரப்போகும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களுக்கு வந்துவிட்டது. காரணம், தமிழகத்தின் தலையாய அரசியல் தலைகள் செயலலிதா, கருணாநிதி இருவருமே இல்லை.

இதனால் தங்களை இந்த அரசியல் களத்தில் நிலைநிறுத்தி கொள்ள ஏராளமான போட்டா போட்டி நிலவுகிறது. அமமுக, திமுக, அதிமுக  இந்த 3 கட்சியினரிடையேதான் கடுமையான போட்டி ஏற்படும் இப்போதே ஓரளவு தெரிந்துவிட்டது.

இந்நிலையில், சீமானும் இந்த இடைத்தேர்தல் எனும் கோதாவில் குதித்துள்ளார். இராகிநகர் இடைத்தேர்தலின்போதும் நாம் தமிழர் கட்சி மற்ற எந்த கட்சியினுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் என்றார் சீமான். அதேபோல, வரப்போகும் 2 இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து முக்கிய ஆலோசனை எடுக்க தொடங்கிவிட்டதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,877.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.