Show all

வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10கோடி: பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆண்டாள் பற்றி தவறாக பேசியதாகவும் அதற்காக கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி வழங்குகிறேன் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் பேசியுள்ளார்.

தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த கிழமை ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ‘தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி வைரமுத்துவிற்கு எதிராக ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.

வருங்காலங்களில் ஹிந்துக்களைப் பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள் என்று கூறினார் நயினார் நாகேந்திரன்.

மேலும் அதிரடியாக, வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ. 10 கோடி தர தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஒட்டு மொத்த தமிழரும் மதம்; சாராதவர்களாக இருப்பதைக் காரணமாக்கி, கிறுத்துவ மதத்திலோ, முகமதிய மதத்திலோ, புத்த மதத்திலோ, சமணமதத்திலோ இணையாதவர்களையெல்லாம் ஹிந்துவாக்க முயல்கிறது பாஜக.

நோட்டாவை வெல்ல வக்கில்லாத பாஜகவினர் ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரான போரை முன்னெடுப்பது வேடிக்கைதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,670

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.