Show all

இரண்டாவது டெஸ்டிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்கனவே தோல்வி முடிந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான  2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களும் இந்தியா 307 ரன்களும் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி, 150 ரன்கள் குவித்தார். 

28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய தென் ஆப்ரிக்கா 258 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில், முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் 51 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து 135 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியை தழுவியது இந்தியா. இந்த தோல்வி மூலம் மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.