Show all

ரஜினி கோபத்தை அருவருக்கும் மக்கள்! விஜய்காந்த் மக்களுக்காக கோபிப்பார். இவர் மக்களை எதிர்த்து கோபிக்கிறார்

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் இதழியலாளர் சந்திப்புகளில் காட்டிய கோபத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த் காட்டிய கோபத்திற்கு அருவருப்பாக மாறியிருக்கிறது. போராட்டத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொல்லி கிளம்பினார் ரஜினிகாந்த். தொடக்கம் முதல் சென்னை திரும்பும் வரை அவரது பேச்சுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சையிலேயே முடிந்தன. 40 ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கோலோச்சி வரும் ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று பாடல் வரிகளுக்கு நடனமாடிய ஒருவரை பார்த்தே, 'யார் நீங்க' என்ற கேள்வியை தூத்துக்குடியில் உள்ள இளைஞர் ஒருவர் எழுப்புவார் என்பதை ரஜினி சிந்தித்தும் பார்த்திருக்க மாட்டார். இதன்பாற்பட்ட கோபம், தூத்துக்குடி இதழியலாளர் சந்திப்பில் எதிரொலித்தது. அதைவிட அதிகமாக சென்னையில் எதிரொலித்தது. இதழியலாளர்கள் இரு கேள்விகள் கேட்டதற்கே 'யோவ்' என்று சத்தம் போட்டார் ரஜினிகாந்த். வேற கேள்வி இருக்கிறதா என முகத்தை கோபத்தோடு வைத்துக் கொண்டு கேட்டார். எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று அவர் கூறியது இதன் உச்சம். 

தமிழகம் சுடுகாடாகிவிட கூடாது என்பதே, போராட்டத்திற்கு காரணம் என்பதை ரஜினிகாந்த் உணராமல் எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்கிறார் என்றால், அத்தனை பிணங்கள் விழும் என்பதே இதன் உள்ளர்த்தமா என்ற கேள்வி எழுகிறது? 

போராட்டம் நடத்தினால் காவல்துறை சுட்டு தள்ளும் என்பதை வேறு மாதிரி சொல்கிறாரா என்கிறார்கள் இணைய ஆர்வலர்கள். 

விஜயகாந்த் பல இதழியலாளர் சந்திப்புகளில் கோபப்பட்டவர்தான். ஆனால், அவரது கோபம் ஜெயலலிதா ஆட்சி மீதுதான் இருந்தது. அதை தட்டிக்கேட்காத சில ஊடகங்களை சுட்டிக்காட்டிதான் அவர் கோபப்பட்டார். மிக கடுமையான வார்த்தைகளை விஜயகாந்த் பயன்படுத்தினாலும்கூட, அதை பெருவாரியான மக்கள் தப்பாக நினைக்கவில்லை. அறச்சீற்றமாகவே அதை பார்த்தனர். 

ரஜினிகாந்த் கோபமோ, அகங்காரமாக பார்க்கப்படுகிறது. அதிகார தோரணையின் வெளிப்பாடாக அது விளிக்கப்படுகிறது. ஆட்சியில் உள்ளோரின் அடக்குமுறை குரலாக இது பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் கோபம் மக்களுக்கானதாக இருந்தது. ரஜினிகாந்த் கோபம், மக்களையே குற்றவாளியாக்குவதாக உள்ளது. 

மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், தம்மை நேரடியாக வாக்கு இயந்திரங்கள் மூலமாக தமிழகத்தின் முதல்வராகவே ஆக்க முடியும் பாஜகவால், என்று கருதுகிறாரா ரஜினி!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.