Show all

பாய்ந்தது தேசத்துரோக வழக்கு! தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திப்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த வெள்ளியன்று தூத்துக்குடி சென்றார். அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் அவரை தூத்துக்குடி விமான நிலையத்திலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, அங்கு சிகிச்சையில்தான் இருந்துவருகிறார். இந்தநிலையில் கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராமதாஸ், வேல்முருகன் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  தேசத் துரோக வழக்கை பதிவு செய்து கைது செய்தார். காவிரி விவகாரம் தொடர்பாக நடுவண், மாநில அரசுகளுக்கு எதிரான வேல்முருகன் பேச்சுகளின் அடிப்படையில் அவர்மீது மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

முன்னதாக, வேல்முருகனை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வேல்முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிடுவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.