Show all

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

சல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவரவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     சல்லிக்கட்டு நடத்த தவறிய நடுவண் மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இதன் ஒருபகுதியாக, மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் நடுவண் அமைச்சர் டி.அர். பாலு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் சட்;டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     அப்போது பேசிய மு.க. ஸ்டாலின்,

நடிகர், நடிகைகளைச் சந்திக்க நேரம் இருக்கும் மோடிக்கு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க நேரம் இல்லையா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

     இது வரை எது எதற்கு என்னவெல்லாம் அவசரசட்டம்;;;; பிறப்பிக்கப் பட்டது தெளிவாகப் பட்டியல் இட்டு பேசிய மு.க.ஸ்டாலின் சல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவரவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.