29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'முகநூல், கீச்சு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் பெண்களுக்கு ஆபத்தானவை. குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பிலிருந்து, தமிழகப் பெண்கள் உடனடியாக விலகுங்கள்.' எனும் விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப் பட்டு வருகிறது. அயோக்கியன் திருநாவுக்கரசு சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவரையும் முகநூலில் சேதி பகிர்ந்தே ஏமாற்றி இருக்கும் குற்றம் தெரியவந்துள்ளது நாளுக்கு நாள் புது புது குற்றத் தகவல்கள் கைதான திருநாவுக்கரசு குழு பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. அந்த பெண் மருத்துவர் சென்னையில் மிகப் பிரபலமானவர். தனது முகநூலில் அயோக்கியன் திருநாவுக்கரசு தான் ஒரு பெண் என்று சொல்லிதான் நட்பாகியிருக்கிறான். பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பது போல பேச்சை தொடங்கியிருக்கிறான். ஒருகட்டத்தில் நிறைய பாலியல் தொடர்பான கேள்விகளையே சந்தேகமாக கேட்க தொடங்கியிருக்கிறான் அயோக்கியன் திருநாவுக்கரசு. அந்த பெண் மருத்துவரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்திருக்கிறார். கடைசியில் பெண் என நினைத்து மருத்துவர் அயோக்கியன் திருநாவுக்கரசிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டவே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஆண் என்று தெரியாத அந்த பெண் மருத்துவரும் சில ஆபாச தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தனது வேலையை காட்டத் தொடங்கினான் அயோக்கியன் திருநாவுக்கரசு. இதுவரை முகநூலில் மருத்துவர் அனுப்பிய சேதிகளை யெல்லாம் ஒட்டுமொத்தமாக அந்த மருத்துவருக்கே திருப்பி அனுப்பி, என் பெயர் திருநாவுக்கரசு, நான் ஒரு ஆண் என்று சொல்லி மிரட்டத் தொடங்கியிருக்கிறான். பொள்ளாச்சி பண்ணை வீட்டுக்கு வரலைன்னா, இந்த சேதிகள் எல்லாத்தையும் உன் கணவனிடம் காட்டுவேன், உன்னை அசிங்கப்படுத்துவேன்.. மருத்துவரா நீ வேலை பார்க்கவே முடியாது என்று மிரட்டல் வார்த்தைகளை அள்ளி வீசி.. அந்த மருத்துவரும் கணவனுக்கு பயந்து பண்ணை வீட்டுக்கு செல்ல.. அயோக்கியன் திருநாவுக்கரசு ஒரு காணொளியை உருவாக்கி விட்டானாம். பின்னர் அந்தக் காணொளியை வைத்துக் கொண்டு அதை காட்டி ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கிவிட்டானாம். இதுபோல நிறைய பேராசிரியைகள், ஆசிரியைகளும் அடக்கமாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.