10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று மாலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள கமல்ஹாசன், அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் முன்பு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், சென்னையில் உள்ள அண்ணாப்பல்கலைக் கழகத்தில், மத்திய தோல் ஆராய்ச்சித்துறை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவிருந்தார். மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை நடைப்பெறவிருந்த இந்த நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் இந் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 'நமக்கான அரசியல் பயணத்தில் நம்மவருடன் நாம்' என்று பெயரிடப்பட்டுள்ள கமலின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (04.04.2018) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,736.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



