Show all

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்களை, வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி, இயங்கலை கையெழுத்து இயக்கம்!

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம் இயங்கலையில் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கலாம்.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம் இயங்கலையில் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கலாம். www.ban-evm.site இந்த இணைப்பில் இணைத்திற்குள் சென்று, உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையமே!
வாக்கு எந்திர (EVM) தேர்தல் வேண்டாம்..
வாக்குச்சீட்டில் (Paper Ballot) தேர்தல் நடத்து..

வாக்கு எந்திர தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடுகள் கூட வாக்குச் சீட்டிலேயே தேர்தல் நடத்துகின்றன.

ஓட்டுரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். சட்டப்படியான இந்த உரிமையானது, எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எனவே வாக்கு எந்திர தேர்தல் முறையை ரத்து செய்துவிட்டு, முன்பு இருந்தது போல வாக்குச்சீட்டு முறையிலேயே அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கண்டிப்பாக வாக்குச்சீட்டின் மூலமே நடத்தப்பட வேண்டுமென கோருகிறோம். என்று கோரிக்கை இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்திக்குக் கீழே உங்கள் பெயரையும், மாவட்டத்தையும் தெரிவிக்க வேண்டும். கீழே உங்கள் கையொப்பம் இட ஒரு கட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் செல்பேசியில் ஆட்காட்டி விரலாலும், மடிக்கணினி மற்றும் மேசைக் கணினியில் சுட்டெலியாலும் கையொப்பம் இட்டு ஒப்படைப்பு செய்ய வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.