Show all

பெங்களூர் சிறை முன்பு பன்னீர்செல்வம் அணியினர் சசி ஆதரவாளர்கள் கார்கள் மீது தாக்குதல்

சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். தொடர்ந்து மேலும் 5 கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன

     சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பரப்பன அக்ரஹாரா அருகே முழக்கங்கள் எழுந்தன. 6கார்கள் கண்ணாடி உடைக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலாவும், இளவரசியும் இன்று மாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். நீதிஅரசர் அஸ்வத் நாராயண் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.

     பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பினர். செயலலிதாவை குற்றவாளியாக மாற்றியதே இந்த சசிகலாதான் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். இதையடுத்து மேலும் 5 கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. செருப்பால் கார்களை ஆவேசமாக அடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.