Show all

அதிமுகவின் பொதுச் செயலாளராக மோடியை மாற்றிய அவலம்! தினகரன் நையாண்டி

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்: 

இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக, உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பெயரை எப்படி பதிவு செய்ய முடியும். அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை. 

குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில் அந்தச் சின்னத்தை கேட்பதில் தவறில்லை. குக்கர் சின்னம் தமிழகம் முழுவதிலும் சென்று சேர்ந்துள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அம்மாவிற்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களும், தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர்.

நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். மேலும் ஒரு கட்சியோடு பேசி வருகிறோம். கூட்டணிக்கு 2 தொகுதிகள் போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 38 தொகுதியிலாவது வெல்வோம். ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாமல் எதிர்த்து தியாக வாழ்க்கை வாழ்ந்துவரும். கழகத்தினருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். 

அதிமுகவின் தற்போதைய நிலை வடிகட்டிய சந்தர்பவாதம். அதிமுக கூட்டணியின் தவறான நடைமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மோடி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் போல பன்னீரும், எடப்பாடியாரும் செயல்படுகிறார்கள். பன்னீர் விரைவில் பாஜகவோடு இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது. 

அதிமுக கூட்டணி என்பது சந்தர்பவாத கூட்டணி. திமுகவுடன் கூட கூட்டணி வைக்க தயங்கமாட்டார்கள். கொள்கையில் உறுதியாக உள்ளோம். கொள்கையில் நாணல் போல வளைந்து கூட்டணி அமைக்கிறார்கள். மறைந்த தலைவர் அம்மா குறித்து தவறாக பேசியவர்களோடு ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அதிமுக கூட்டணி ராஜதந்திரம் என்பது, சந்தர்ப்பவாத கூட்டணி, தொண்டர்களை நம்பிதான் கழகம் செயல்படுகிறது, சிறிய கட்சிகளோடு கூட்டணி பேசி வருகிறோம். 

துணை முதல்வர் அதிமுக பொது செயலாளரை மாற்றி மோடியை பொது செயலாளராக ஆக்கியுள்ளார். ஜெயலலிதா மற்றும் கலைஞர் இருந்தவரை தான் இந்த கட்சிக்கு இத்தனை வாக்கு விழுக்காடு. ஆனால் தற்போது அது போன்ற வாக்கு விழுக்காடுகளை சொல்ல முடியாது. புதிதாக வரும் கட்சிகளின் ஆதரவை மட்டுமே ஏற்போம். தொகுதி ஒதுக்கீடு செய்ய முடியாது. 

ஒரு இயக்கம் என்பது தொண்டர்களை வைத்து தான் தலைவர்கள் வருவார்கள் போவார்கள். தமிழிசை சௌந்தரராஜன் பற்றி தவறாக பேசியதால் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு போட்டார்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவார்கள் என்பதால் என்னிடமிருந்து பயந்து ஓடினார்.

அதே போல் தான் செந்தில்பாலாஜி திமுக சென்றார், என்னிடம் இருந்த போது அவர் எப்படி மரியாதையாக இருந்தார், ஆனால் அவரின் நிலைமையை பார்த்தால் பாவமாக உள்ளது. 

கிணத்துகடவு தாமோதரன் எனது கட்சிக்கு வந்து மாவட்ட செயலாளர் பதவி கேட்டதால் என்னால் தர முடியவில்லை, அதனால் திமுகவிடம் சென்றுவிட்டார். கொள்கை இன்றி கூட்டணி வைத்த அதிமுகவினர் செயலலிதா புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைக்க கூடாது. துணை முதல்வர் அதிமுக பொதுச்செயலாளரை மாற்றி மோடியை பொதுச்செயலாளராக ஆக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.