Show all

மதுரை பெண் சித்த மருத்துவர் அசத்தல்! ஓகஇருக்கையின் நடுகல்முத்திரை மூலம் உயிர்வளிப் பற்றாக்குறைக்குத் தீர்வு

மதுரையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கொரோனா சிகிச்;சையில் போது உயிர்வளிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சித்த மருத்துவத்தில், ஓகஇருக்கையில் பயன்பாட்டில் உள்ள ‘நடுகல்’ முத்திரை உதவும் என்று தனது ஆய்வு மூலம் நிறுவியிருக்கிறார்.

25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: முத்திரை என்பது, சித்த மருத்துவத்தில் ஒரு பகுதியான, ஓக இருக்கையில், கைவிரல்களை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பகுதி ஆகும்.

அந்த முத்திரைகளில் இரு கைகளையும் தனித் தனியாக வைத்து கொண்டு அவற்றில் ஒவ்வொரு கையிலும் விரலை வைத்துக் கொள்ளும் வகைக்கு முன், பின், நடு, மறு என்பனவாக பலவகை முத்திரைகள் சொல்லப்பட்டுள்ளன. 

அதில் நடுகல் முத்திரை என்கிற சிறப்பு முத்திரை இரண்டு கை விரல்களையும் பிணைத்து வைத்துக் கொள்வதற்கான ஒரு முறையாகும். இந்த முத்திரையை நாள்தோறும் பயிற்சியாகச் செய்து வரும் போது என்ன பலன்கள் என்பதை சித்த மருத்துவத்தில் ஓக இருக்கை குறித்த பல்வேறு நூல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பல சித்த மருத்துவர்கள் அறிவார்கள்தாம். 

ஆனால் மதுரையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கொரோனா சிகிச்;சையில் போது உயிர்வளிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த ‘நடுகல்’ முத்திரை உதவும் என்று தனது ஆய்வு மூலம் நிறுவியிருக்கிறார். இந்த மீள் ஆய்வுக்கு சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது. மருத்துவ உயிர்வளி உருளைக்கு இந்தியாவே அல்லல் படும் நிலையில், சித்த மருத்துவத்தில் நடைமுறையில் உள்ள நடுகல் முத்திரை எனும் ஒகஇருக்கைப் பயிற்சியின் மூலம் உடல் வெப்பத்தை அதிகரித்து உயிர்வளி அளவை உடலில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகம் ஆய்விலும் முடிவாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு உயிர்வளி செலுத்துவது சிகிச்சையில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மருத்துவ உயிர்வளித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் அறைகூவலாக உருவெடுத்துள்ளது. உயிர்வளிப் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் ஒன்றிய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. 

மதுரை சித்தர் வனம் சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஜெய கல்பனா, கொரோனா நோய்த் தடுப்பு முறைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இதனைக் கண்டறிந்துள்ளார். இதனை, ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழக த்தின் ஆய்வகத்துறை இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 

சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழக உயிரியில் பொறிமை துறை நடுகல் முத்திரை எனப்படும் ஓகஇருக்கை முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம் என ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் உயிர்வளி அளவு அதிகரிப்பதுடன் குருதி ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயளிகளுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டியம் கட்டாயம் ஏற்படுகிறது. நடுகல் முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து மூச்சுத் திறன் இயல்பாக அதிகரிப்பதை இந்தியத் தொழில் நுட்பக் கழக நிபுணர் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். 

நடுகல் முத்திரை செய்யும் முறையாக சித்தி மருத்துவத்தின் ஒரு பகுதியான ஓகஇருக்கையில் சொல்லப்பட்டிருப்பதாவது:

முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து அமர்விருக்கையில் அமரவும்.
முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
முதலில் இரு நாசி துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும்.
மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இருக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
இந்த முத்திரையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
படிப்படியாக 10 நிமிடங்கள் செய்யலாம்.
பின்பு ஒரு மாதத்தில் 15 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்:
மூச்சுப்பை மற்றும் நுரையீரல் வலுப்படும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடலில் அதிக எடை குறையும்.
அடிக்கடி சளி பிடிப்பது குறையும்.
அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
உடல் சூட்டை சமப்படுத்தும்.
உடலில் உயிரோட்டமும் வெப்ப ஓட்டமும் சீராக இருக்கும்.

இந்த முறையை கொரோனா சிகிச்சையில், நமக்கு நாமே  உயிர்வளியை உற்பத்தி செய்து கொண்டு பலனடைய பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் மூலம் நிறுவியிருக்கிறார் மதுரை பெண் சித்த மருத்துவர் கல்பனா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.