ஏற்கெனவே காவல்துறையினர் 13 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’யிடம் இருந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து தெரியவில்லை. எனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை, ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறையே’ விசாரிக்க சாத்தான்குடி வணிகர்கள், பொதுமக்கள் வேண்டுகோள். 25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஏற்கெனவே காவல்துறையினர் 13 அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’யிடம் இருந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து தெரியவில்லை. இந்த நிலையில்- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை, தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு ஏற்றது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’ நடவடிக்கைகள் வேகமாக இருப்பதால், ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’ விசாரணையே தொடர வேண்டும்’ என சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு விசாரணையை தொடர்ந்து ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறையே’ விசாரணை செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை சாத்தான்குடி வணிகர்கள், பொதுமக்கள் முன்வைத்தனர். இந்த வழக்கில், ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’ இதுவரை 10 பேர்களை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பென்னிக்ஸின் குடும்பத்தார் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலையில் வழக்கு விசாரணை மேலும் தொடர்ந்தால் ஓரிரு மாதங்களுக்குள் முழு விசாரணையும் முடிந்து விடும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நியாயம் தாமதிக்கபடமால் கிடைக்கும். இவ்வழக்கில் 70 விழுக்காட்டு விசாரணை முடிவடைந்த நிலையில், மீண்டும் நடுவண் குற்றப்புலனாய்வு விசாரணையை தொடங்கினால், விசாரணை முடிவடைய காலதாமதம் ஆகும். ஏற்கெனவே காவல்துறையினர் 13 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’யிடம் இருந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து தெரியவில்லை. இதே போல பல வழக்குகளின் நிலை குறித்தும் தெரியவில்லை. எனவே, இவ்வழக்கில் ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறையின்’ விசாரணையே தொடர வேண்டும். இதுகுறித்து முதல்வருக்கு சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.