Show all

மு.க.ஸ்டாலினை தன் மணிவிழாவிற்கு அழைக்கும் ஹெச்.ராஜா

நீட் தேர்வுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் ராஜாவை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளதோடு, ஹெச்.ராஜாவைப் பதவியில் அமர்த்த தேர்தல் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்கத் திரைமறைவில் முயற்சி நடப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஹெச்.ராஜா இன்று சந்திக்க உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நண்பகல் 12.30 மணிக்கு சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது மணிவிழா அழைப்பிதழைக் கொடுக்க விருப்பதாகவும், அப்போது, மணி விழாவில் கலந்துகொள்ளும்படி மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.