நடுவண் அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தின் ஒத்துழைப்போடு தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்று விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் பதித்து எரிவாயுவை எடுத்துச் செல்வது. புதுக் கோட்டை நல்லகொண்டான் பட்டியில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் எண்ணெய் கிணறுக்கு அருகே எரிவாயு போக்குக் குழாயில் கசிந்த எரிவாயுவால் கடந்த ஒரு மணி நேரமாக தீ பற்றி எரிந்து கொண்டுள்ளது. கரும்புகை வானைத் தொடும் அளவிற்கு பரவி கொண்டிருக்கிறது. தற்போது தான் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



