Show all

நம்ப மோடி மாதவருமானம் இருபதாயிரத்துக்கு மேல உள்ளவங்களுக்கே அடிச்சாரே ஆப்பு!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.5 லட்சம் கோடி

     1.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் மிகப் பெரும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 2,270 கோடி டாலராக (சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) உயர்ந்தது.

     2.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய இடைவெளியில் சன் பார்மா நிறுவன அதிபர் திலீப் சாங்வி 1,690 டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

     3.

சொத்து மதிப்பு 1,520 கோடி டாலர் (சுமார் ரூ.1.01 லட்சம் கோடி) கொண்ட ஹிந்துஜா சகோதரர்கள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினர்.

     4.

விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 1,500 கோடி டாலராக (சுமார் ரூ.1 லட்சம் கோடி) உள்ளது.

     48.

யோகா குரு ராம்தேவுக்கு நெருக்கமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன அதிபர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா, யாரும் எதிர்பாராத வகையில் பட்டியலில் இடம் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

250 கோடி டாலர் (சுமார் ரூ.16,600 கோடி) சொத்து மதிப்பு கொண்ட அவருக்கு இந்தப் பட்டியலில் 48-ஆவது இடம் கிடைத்துள்ளது.

     32.

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்த முறை 340 கோடி டாலருடன் (சுமார் ரூ.22,700 கோடி) 32-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

     இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 38,100 கோடி டாலர் (சுமார் ரூ.25.5 லட்சம் கோடி) என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள்

     1.

பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

     பிரபல அமெரிக்க வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுவரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டது.

 

மொத்தம் 1810 பேர்  வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த பட்டியலில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பெற்றுவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

     பில்கேட்ஸின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 75 பில்லியன் டாலராக உள்ளது. இது சென்ற ஆண்டை விட 4.2 பில்லியன் டாலர் குறைவுதான். பில்கெட்ஸ்க்கு

     2.

அடுத்த 2-வது இடத்தில் ஸ்பானிஷ் பில்லியனர் அமன்சியோ ஒர்டிகா உள்ளார்.

 

     36.

இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 36-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த 84 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் 36-வது இடத்தில் இருந்தாலும் இந்தியர்களில் முதலாவதாக முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.

     88.

கடந்த முறை 66 வது இடத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரான எச்.சி.எல் நிறுவனர் ஷிவ்நாடார் தற்போது 88 வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

     959.

மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்தவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி 959 வது இடத்திலும்,

     453.

சர்ச்சைக்குரிய தொழிலதிபரும் மோடியின் நண்பராக பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்படுபவருமான கௌதம் அதானி 453 வது இடத்திலும் உள்ளனர்.

     நம்ப மோடி மாதவருமானம் இருபதாயிரத்துக்கு மேல உள்ளவங்களுக்கே அடிச்சாரே ஆப்பு!

     அடேங்கப்பாடி! இந்தியாவிலும் உலகத்திலும் இம்புட்டு பெரிய பணக்காரங்க இருக்காங்களா என்ன!!

     சொத்து குவிப்பு வழக்கெல்லாம் தாண்டி இவ்வளவு சம்பாதிச்சாங்களா!

இல்ல.. இவங்களுக்கெல்லாம் சொத்து குவிப்பு வழக்கெல்லாம் கிடையாதா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.