Show all

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

     அதிமுகவில் பொதுச் செயலர் வி.கே. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகிறன.

     இந்த நிலையில், கடந்த 8-இல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர், சட்;டமன்ற உறுப்பினர்கள் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாமல்லபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

     இதில், பேருந்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்;டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியேறிவிட்டார். இந்த நிலையில் அவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனுவில்,

எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் சட்;டமன்ற உறுப்பினர்களிடம் அங்குள்ளவர்கள் மிரட்டி வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்

என குறிப்பிட்டிருந்தார்.

     இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, பழனிச்சாமியின் வீட்டில் அரை மணி நேரம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, அவர் மிரட்டி கையெழுத்து பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

     இந்தப் புகார் தொடர்பாக, சேப்பாக்கத்தில் உள்ள சட்;டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள ஒரு அதிகாரியிடமும் காவல்துறையிர் விசாரணை மேற்கொண்டனர்.

     பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.