சசிகலா
முதல்வராகப் போவது தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பலரும் சசிகலா முதல்வரா என்று அதிர்ந்து போய் கேட்கிறார்கள். இந்த
நிலையில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஒரு கீச்சகத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சர்தேசாய்
போட்டுள்ள கீச்சகப் பதிவில் தேர்தலையே சந்திக்காமல் சசிகலா முதல்வராகப் போகிறார். இதெல்லாம்
இந்தியாவில்தான் நடக்கும் என்று போட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஒருவர், மன்மோகன்
சிங் கூடத்தான் தேர்தலைச் சந்திக்காமலேயே பிரதமரானார் என்று கூறியிருந்தார். சர்தேசாய்
போட்டிருந்த இன்னொரு கீச்சகப் பதிவில் ஆச்சரியமானது.. நரேந்திர மோடியும், தேர்தலைச்
சந்திக்காமல்தான் குஜராத் முதல்வரானார். எனவே சசிகலாவுக்கு மோடி, மன்மோகன் சிங் ஆகியோர்
நல்ல கம்பெனி என்று போட்டுள்ளார். கீச்சகம்
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சசிகலா முதல்வரானதுதான் பெரும் அதிர்ச்சிகரமான
சம்பவமாக இன்று மாலை முதல் வலம் வந்து கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



