Show all

இராசராசசோழன் என்றாலே உலகமே கிடுகிடுக்கும், மாமன்னர் இராசராசசோழனின் 1033வது சதயஓரை விழா, இசையுடன் தொடங்கியது

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாமன்னன் இராசராச சோழனின் 1033 வது ஆண்டு சதயஓரை விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியது

விழாவின் முதன்மை நிகழ்வாக, கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற சோழமரபின், இராசராச சோழன் என்றாலே உலகமே கிடுகிடுக்கும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் இராசராச சோழன் சிலைக்கு, அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

இதனை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணின் மீனவர்களைக் மீட்க, உலகையே கிடு நடுங்க வைத்த மாமன்னனின் பிறந்த நாளில் உறுதியேற்க வேண்டும் தமிழக அரசு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,946.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.