30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வருகிறது. எப்படி தீர்ப்பு வந்தாலும் தமிழக ஆட்சி கலைவது உறுதி. அதனால் சட்டமன்றத் தேர்தல்தான் முதலில் வரப்போகிறது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வருமானால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் அதிமுக ஆட்சி கலையும். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்தால், பதினெட்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் ஆளும் அதிமுக உறுதியாக வைப்புத் தொகை கூட ஒரு தொகுதியிலும் வாங்க முடியாது. ஆளும் அதிமுக ஆட்சி உறுதியாக கலையும். சட்டமன்றத் தேர்தல் வரும். நடுவண் பாஜக அரசு, அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று அதற்கான தலையீட்டில், தீர்ப்பு முன்னெடுக்கப் படுமானால், நடுவர் அமர்வில் இருக்கும் இரு அறங்கூற்றுவர்களும் செல்லும், செல்லாது என்று இரு வேறு தீர்ப்புகளை வழங்கி வழக்கை இன்னும் ஆறு மாதம் ஒரு ஆண்டு என்று தள்ளிப் போடப் படலாம். அப்படி ஒரு வேளை நடந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் முதலில் வரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



