பவானி ஆற்றின்
குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 500க்கும்
மேற்பட்டோர் சென்றனர். இதுபற்றி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்
காசியண்ணன், செயலாளர் வடிவேல் ஆகியோர் கூறியதாவது: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு, ஆறு இடங்களில்
தடுப்பணை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். தடுப்பணை
பணியை தடுத்து நிறுத்த, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள்,
கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் கூட முடிவு செய்தோம். அதற்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து,
500க்கும் மேற்பட்டோர், ஆனைக்கட்டி செல்கிறோம். அங்கிருந்து, அணைக்கட்டும் பகுதிக்கு,
போராட்டம் நடத்த செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



