11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாமகவைச் சேர்ந்த முன்னனி தலைவர் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு அகவை 58. நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர். வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் விளங்கியவர். புhமக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். காடுவெட்டி குரு. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



