Show all

இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர்

இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

     இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறோம். அதிமுகவையோ, பன்னீர் செல்வத்தையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. மக்கள் பொருட்படுத்துவதாத கூட்டணிதான் மக்கள்நலக் கூட்டணி. தமாகா உட்பட எந்த கட்சியும் திமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் ஆட்சேபனையில்லை என்றார்.

     மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்திடமோ, பன்னீர்செல்வத்திடமோ இல்லை. இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.