இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு கொண்டுவந்த ஹிந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டாடும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை முடக்கும் வகைக்காக நாளையிலிருந்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு 12 நாட்கள் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாளை முதல் 12 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதில் தடியடி, கைது நடவடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இது மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை முடக்கும் வகைக்காக என்று தொடர்புடைய நிர்வாகம் கருதுகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாட்களில் அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி உள்ளாட்சி தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்கும் விதமாகவும், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய விழாக்கள் வருவதாலும் தொடர் விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.
இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு கொண்டுவந்த ஹிந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டாடும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட முதன்மை நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.