Show all

ஹிந்து மக்கள் கட்சி ஆட்சி! பகல்கனவு கண்ட ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய ஒரு தனியார் தொலைக்காட்சி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகரமுதலி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இணயத்தளம் கண்டன கணைகளால் நிரம்பி வழிகிறது.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடந்த தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி என்ற ஒரு அமைப்பைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்ற நபர் மதவாத நஞ்சைக் கக்கியுள்ளார்.

ஹிந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும். அதற்கு பதிலாக பாரதி, குமரகுருபரர், வள்ளலார் பாடலை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ‘மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கிறிஸ்துவ மிஷனரிகள் பேச்சைக் கேட்டவர். அவர் பாடலை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

ரத, கஜ, துரக, பதாதிகளுடன் காவிக் கொடி ஏந்தி உலாவருகிற ஆனானப் பட்ட பாஜகவிற்கே நோட்டாவிற்கு தரும் மதிப்பை கூட தராத தமிழ் மக்கள் மண்ணில் ஆட்சியைப் பிடித்து தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றப் போகிறாராம். அடப்பாவி எதுக்கடா உனக்கு இந்த பகல்கனவு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,677

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.