உச்ச நீதிமன்றத்தில்
இன்று வழங்கப் பட்ட தீர்ப்பில்- செயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, விசாரணை
நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் முறையே செயலலிதா அவர்களுக்கு நூறு கோடி
மற்றவர்களுக்கு தாலா பத்து கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. செயலலிதா மரணடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன்,
இளவரசி ஆகியோர் சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஒரு பெருங் கூட்டத்தின் மீது வீசப்பட்ட தீப்பொறி
மூன்று மனிதர்களை மட்டும் தாக்கியிருக்கிறது என்பதால் அந்த மூன்று பேர்களை மட்டுமே
குறிவைத்து தாக்குவது தாக்குதலின் நோக்கம் என்று மற்றவர்கள் எல்லாம் தங்களை அந்நியப்
படுத்திக் கொள்வதை நீதி, நியாயம் என்ற தலைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருப்பவர்கள் தாம் என்றில்லாமல் அதிமுக
காரர்களும் இனிப்பு பரிமாறிக்கொள்வது மூடத்தனத்தின் உச்சம். இந்த நால்வருக்குமான தண்டனையில் பன்னீர் செல்வம்
உள்ளிட்ட 136 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பங்கில்லையா என்ன? இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னால் கட்சியை தக்க
வைத்துக் கொள்ள சான்றுகளோடு ஒவ்வொரு கட்சியும் முயன்ற உபாயம் சொத்து குவிப்பது. காங்கிரசும் பாஜகவும் கூட்டுக்களவாணிகளாக சொத்துக்
குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் சுவிஸ் வங்கி வரை. பாம்பாட்டி- பாம்புக்கும் கீரிக்கும்
சண்டை விடுகிறேன், சண்டை விடுகிறேன் என்று நமது பையை எல்லாம் துளாவி விடுவது போலத்தானே
மோடி கருப்பு பணத்தை மீட்கிறேன்
கருப்பு பணத்தை மீட்கிறேன் என்று, ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் நமது பையை எல்லாம்
துளாவினார். நமது தமிழகக் கட்சிக்காரர்கள் நண்டுகள் தங்களைத்
தாங்களே காலை வாரி விட்டுக் கொளவதைப் போல பெட்டிக் கடையில் மிட்டாய் திருடிய பிச்சைக்காரர்களைப்
போலகாட்டிக் கொடுத்துக் கொண்டு ஒருவன் அடி படுவதில் மற்றவன் மகிழ்ந்து கொண்டிருக்கிறான். அதிமுககாரர்களே! இருபத்தியோரு ஆண்டுகளாக நீதிமன்றம்
உங்களை அல்லோகல்லப் படுத்திய போதும் ஏதோ ஒரு நியாயம் பற்றி தமிழக மக்கள் உங்களை கைவிடவேயில்லை. சிந்தித்து சேதனைகளைக்
கடந்து வரவேண்டிய நேரத்தில் உங்களை நீங்களே அசிங்கப் படுத்திக் கொள்ளாதீர்கள். நன்மையும் தீமையும்
நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்
படும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



