Show all

தன்னை அணியமாக உத்தரவிடும் அதிகாரம் உயர்அறங்கூற்று மன்றத்திற்கு இல்லை என எச்.ராஜா தெரிவிக்கிறார்.

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் அறங்கூற்றுமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 4 கிழமைக்குள் எச்.ராஜா நேரில் அணியமாகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை அறங்கூற்றுவர் தகில் ரமானி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா தரப்பில் அணியமான மூத்த வழக்கறிஞர், எச்.ராஜா மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் அணியமாக உத்தரவிடும் அதிகாரம், சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது என்றும், இது தொடர்பான வழக்குகளை உச்ச அறங்கூற்;றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் மட்டுமே நேரில் அணியமாக உத்தரவிட முடியும் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் தன்னை அணியமாக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தரப்பில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.