Show all

ஈரோடு மாவட்டம் சாதனை! கொரோனா இல்லாத மாவட்டமாகி, மஞ்சள் மாவட்டம், சிவப்பு அறிவிக்கப்பட்டு, தற்போது பச்சை மண்டலத்திற்குள் நுழைகிறது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இன்று அவர்கள் நான்கு பேரும் வீடு திருப்புகின்றனர். இதையடுத்து, கொரோனா பிடியில் இருந்து முழுவதும் விடுபடும் மாவட்டமாக ஈரோடு மாறியது.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சையில் இருக்கும் நான்கு கொரோனா நோயாளிகளும் இன்று குணமாகி வீடு திருப்பிய நிலையில், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. ஈரோட்டில் கடந்த 12நாட்களாக  கொரோனா நோயாளிகளாக யாரும் கண்டறிப்படவில்லை.
 
மாதத்தின் தொடக்கத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை எண்ணிக்கையில் இருந்தபோது ஈரோட்டில் 24 பேருக்கும், சென்னையில் 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.

தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு கொரோனா இல்லை என்று சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டனர்.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இன்று அவர்கள் நான்கு பேரும் வீடு திருப்புகின்றனர். இதையடுத்து, கொரோனா பிடியில் இருந்து முழுவதும் விடுபடும் மாவட்டமாக ஈரோடு மாறியது.

தற்போது கடுமையான கட்டுப்பாட்டுக்குள் ஈரோடு மாவட்டம் இருக்கிறது. கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்னர் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் மாவட்டம் கொரோனா ஆட்சிமையால் சிவப்பு மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈரோடு பச்சை மண்டலத்திற்குள் நுழைகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.