தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3616. தமிழகத்தில் இன்றைய குணமளிப்பு 4545. என இன்றைய கொரோனா நிலவரத்தில் பாதிப்பு குறைந்து, குணமளிப்பு அதிகரித்திருப்பது இன்றைய தமிழக கொரோனா நிலவரத்தில் நமக்கு கிடைத்திட்ட நல்ல செய்தியாகும். 23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று தான் பேரளவில் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 45,839 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 22374 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். விரைவில் சென்னை கொரோனாவின் பெரும் பாதிப்பிலிருந்து குறைந்து மற்ற மாவட்டங்கள் போன்ற நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 334, கன்னியாகுமரி 119, காஞ்சிபுரத்தில் 106, செங்கல்பட்டில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 217 பேர், தூத்துக்குடியில் 144 பேர், திருநெல்வேலியில் 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் இன்று ஒரே நாளில் 253 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேனியில் 94 பேர், வேலூரில் 117 பேர், திருவண்ணாமலையில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 125 பேர், திருச்சியில் 55 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,52,360 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.