13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:; இன்று காலை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், இராகிநகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரனின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ப நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இச்சம்பவத்தின் போது தினகரன் காரில் இல்லாததால், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய போது, ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி சென்றுள்ள நிலையில் காரின் சில பகுதி சேதமடைந்துள்ளதால், காரில் இருந்த ஓட்டுநர், தினகரனின் புகைப்படக்காரர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அசம்பாவிதத்திற்கு தினகரன் கட்சியில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர் புல்லட் பரிமளம் காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை விசாரணையில், தினகரன் கட்சியில் இருந்து அண்;மையில் நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் இன்னோவா காரில் வந்தார். அவரது காரில் இருந்த பெட்ரோல் குண்டு திடீரென வெடித்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இதில் தினகரன் ஆதரவாளர் பாண்டியன், புகைப்பட கலைஞர் டார்வின் காயமுற்றனர். தினகரன் வீடு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் பரிமளம் வந்ததாக தினகரன் தரப்பினர் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



