Show all

கட்சியின் கொடி! எவரும் வழக்குப் போட்டு வம்புக்கு இழுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் கமல்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் முந்தாநாள் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என்று அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். வௌ;ளை நிறம் கொண்ட அவரது கட்சியின் கொடியில், ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு நடுவில் விண்மீன் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று உள்ளது. மேலும் கட்சியின் பெயரும் கொடியில் இடம்பெற்று இருக்கிறது.

கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் இலச்சினை போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன.

மும்பை செம்பூரில் உள்ள ‘தமிழர் பாசறை’ என்ற அமைப்பின் இலச்சினையில், வட்ட வடிவில் 6 கைகள் கோர்த்து இருப்பது போன்றும், அதன் நடுவில் ‘அ’ என்ற எழுத்தும் உள்ளது. இதேபோல், தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பின் கொடியில், வட்ட வடிவில் கைகள் கோர்த்து இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று இருக்கிறது.

இவற்றினை குறிப்பிட்டு, அதுபோன்று கமல்ஹாசன் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள உருவம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் காரசாரமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

மற்ற இலட்சினைகளில் குறிப்பிட்டிருப்பன இடது கைகள், கமலின் இலச்சினையில் இருப்பது வலது கைகள் என்பது அடிப்படையான வேறுபாடுதான். (அப்படியானால் கமல் வலதுசாரியா!) இருந்தாலும், எவரும் வழக்குப் போட்டு வம்புக்கு இழுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் கமல்;; 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.