Show all

மோதுகிறார்கள்! தமிழகத்தில், தமிழால் வாழ்ந்து, தமிழ்மரபுகளை நையாண்டி செய்யும் மனுஷ்யபுத்திரனும், எச்.ராஜாவும்

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.இராஜா உலகறிந்த ஹிந்துத்துவாவாதி. கவிஞர் மனுஷ்யபுத்திரன் பின் நவீனத்துவவாதி, இருவருக்கும் ஒரு ஒற்றுமை: தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழால் வாழ்ந்து கொண்டு தமிழ்மரபுகளை நையாண்டி செய்து தமிழக மக்களோடு, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

இரண்டு நாட்களுக்கு முன் ஊழியின் நடனம் என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.  சின்னக் குழந்தைகள் மழையை சாமி உச்சா போகிறது என்று கருதுவதைப் போல அகவை முதிர்ந்தவரான கவிஞர் மனுஷ்யபுத்திரன் அகவை முதிர்ந்தோருக்கு மட்டுமான என்று சான்றிதழ்  வழங்கத் தக்க உருவகத்;தை மேற்கொண்டிருந்தார். தமிழ் மரபுக்கு அதுதான் இடக்கரடக்கல். ஆனால் ஹிந்துத்துவாவாதி எச்ராஜாவுக்கோ அதிலெல்லாம் பிரச்சனை எழவில்லை. கவிஞர் மனுஷ்யபுத்திரன் எச் ராஜவைப் பொருத்தவரை முகமதியராம் அவர் இவர் வணங்கும் தெய்வத்தை பற்றி எழுதக் கூடாதாம். அதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்தக் கவிதை ஹிந்து மத கடவுள்களை இகழ்வதாகவும், ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இருந்தார். அதேபோல் இஸ்லாமிய மதவெறி பிடித்து மனுஷ்ய புத்திரன் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.

மேலும், மனுஷ்யபுத்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இந்தப் பிரச்சனை இணையம் முழுக்க பரவியது. எச்.ராஜாவிற்கு எதிராக சிலரும், மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

எச். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து அவர் அளித்துள்ள புகாரில் ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை ஹிந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது வலைதள பக்கங்களில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு காவல்  நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் சமூக விரோதிகள் எனது செல்பேசி எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். புலன எண்ணுக்கு சேதிகளும் வருகின்றன.

இதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,886.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.