Show all

உணவு, பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வரவேண்டாம்: புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்துவர வேண்டாம் என திண்டுக்கல்லில் நடந்த நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திமுக, தொடக்க காலத்தில் இப்படிதான் வளர்த்தெடுக்கப் பட்டது. ஆனால் பொதுஉடைமை கட்சிகளும் இந்தக் கோணத்தில் தான் முயன்றன; ஆனால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இன்றைக்கு நாம் தமிழர்கட்சி மட்டுந்தாம் இந்தக் கோணத்தில் வளர்த்தெடுக்கப் பட்டு வருகிறது. இப்படி வளர்த்தெடுப்பதற்கு உணர்ச்சிகரமான தத்துவம் இருந்தால் தாம் முடியும். அறிவை முன்னெடுக்கிற தத்துவங்களால் வளர்வதற்கு இந்தக் கோணம் பயன் படாது.

உணர்ச்சியிலும், குறுகிய தளத்தில் முன்னெடுத்து குறுகிய தளத்தில் வென்ற கட்சி பாமக.

குறுகியதளத்தில், உணர்ச்சியைத் தூண்டும் நிறைய கட்சிகள் குறுகிய தளத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.

பாஜக, தமிழ்தளத்தில் இல்லவேயில்லாத மதவுணர்ச்சியை காசு கொடுக்காமல் வென்றெடுக்கும் முயற்சியில் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ், உணர்ச்சி, அறிவு எதையும் முன்னெடுக்காமல். மக்களுக்குப் பதிலாக மற்றக் கட்சிகளுக்கு காசு கொடுத்து தளத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை மறுநாள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தொடங்க உள்ளார். இதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லுக்கு வரும் வௌ;ளியன்று வருகிறார். ராமநாதபுரத்தில் நடிகர் கமல்ஹாசன் தொடங்க உள்ள அரசியல் பயணத்தில் பங்கேற்பது குறித்து, திண்டுக்கல் மாவட்ட நடிகர் கமல்ஹசன் நற்பணி இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். இணை செயலாளர் ஸ்டாலின் வர வேற்றார். ராமநாதபுரத்தில் தொடங்கும் கமலின் அரசியல் பயண நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விருப்பப்பட்டு வருபவர்களை மட்டும் அழைத்து வரவேண்டும், யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் கமல்ஹாசனுக்கு, நகர எல்லையான சவேரியார்பாளையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கமலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், தலைமை மட்டத்தில் கட்சியில் இடம் பெற வருகிறவர்கள் என்ன நோக்கமுடையவர்களாக வருகிறார்களோ யாருக்குத் தெரியும். எதை வைத்துக் கருத்துப் பரப்புதல் செய்வார்கள்? தொடக்கத்தில் காசைத்தானே இறைப்பார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,703

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.