31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, திருமயம் காவல்துறையினர் உயர்அறங்கூற்றுமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, அறங்கூற்றுமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



