Show all

அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்று வருவதாக மாவட்டக் காவல்துறை தலைவரிடம் இயக்குநர்கள் புகார்

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக இயக்குநர் பாரதி ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அப்போது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது.

ஆனாலும், இதுதொடர்பாக இயக்குநர் அமீர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அமீருக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக இயக்குநர்கள் மாவட்ட காவல்துறை தலைவரிடம்; புகார் அளித்தனர்.

இயக்குநர்கள் பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோர் மாவட்ட காவல்துறை தலைவரிடம்; அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய பாரதி ராஜா, இயக்குநீர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது என குற்றம்சாட்டினார். ஜனநாயக நாட்டில் பத்திரிக்கை உரிமை ஒடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,815. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.