14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 மதுரை மாநகர் மாவட்ட தினகரன் அணி சார்பில் பழங்காநத்தத்தில் நேற்று முன்தினம் இரவு மொழிப்போர் தியாகி களுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது: திமுக ஆட்சியின்போது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கு, உலகத் தமிழ் மாநாட்டு அமைப்பு அனுமதி வழங்கவில்லை. அதற்கு காரணம் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம். அதேபோல், எடப்பாடி-பன்னீர் அணியினரும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. தற்போது வாயைத் திறந்தாலே உளறுகின்றனர். கட்சியில் முக்கிய பதவிகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெற்றுத்தர காரணமாக இருந்தவர் தினகரன் என்பதே உண்மை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நின்றபோது சட்டமன்றஉறுப்பினர்கள் ஆதரவை பெற்று சசிகலாவால் முதல்வர் பதவியேற்ற கே.பழனிசாமி அந்த நன்றியை ஒரு மாதத்துக்குள் மறந்துவிட்டார். திஹார் சிறையில் தினகரன் இருந்தபோது, அவரை பார்க்க சென்ற என்னை உளவுத்துறை மூலம் மிரட்டினர். ஆனால், அதையெல்லாம் நான் கண்டுகொள்ள வில்லை. சட்டமன்றஉறுப்பினர் பதவி பறிக்கப் பட்டதற்காக நாங்கள் 18 பேரும் வருத்தப்படவில்லை. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால், அதில் நாங்கள் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,680
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



