Show all

அப்துல்காலம் சொன்னது போல நல்ல தமிழகத்தை உருவாக்கும் கனவு தன்னுடையது என்று தினகரன் பெருமிதம்

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டில் எடுத்திருக்கிற முடிவு என்னவென்றால் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூடாது என்பது தான் என தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் உதகை பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் பலர் பேசும்போது, ஒரு அளவை தாண்டி தாக்கி பேசி இருக்கிறார்கள் அதற்கு பயம்தான் காரணம், என்றார்.

மேலும் தாங்கள் அசந்த நேரம் பார்த்து தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளவர்களை பார்த்து நான் கேட்பது ஒன்று தான். தேர்தல் நேரத்தில் நீங்கள் என்ன தியானம் செய்ய போயிருந்தீர்களா?

இதற்கு மேல் நான் எதைப்பற்றியும் பேசப்போவதில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.

மேலும் ஆங்கிலப் புத்தாண்டில் நான் எடுத்திருக்கிற முடிவு என்னவென்றால் இவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

நான் பகல்கனவு காண்பதாக சொல்கிறார்கள். எடப்பாடி அணியினர் தான் பகல் கனவு காண்கின்றனர். எங்களின் கனவு அப்துல்காலம் சொன்னது போல நல்ல தமிழகத்தை உருவாக்கும் ஒரு கனவு என்று தினகரன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,653

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.