09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொள்கலன் சுமையுந்து வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த வண்டி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. அதை உடனே சரிசெய்ய முடியாததால் கொள்கலன் சுமையுந்து சாலையின் நடுவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பணத்துடன் நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த பொதுமக்கள் அங்கு ஆர்வமுடன் திரண்டனர். பொதுமக்கள் கூடுவதை அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும், வண்டிக்குப் பாதுகாப்பாக வந்த நடுவண் தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கொள்கலனை யாரும் நெருங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மீட்பு வண்டி அங்கு வரவைக்கப்பட்டு, கொள்கலன் சுமையுந்து ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



