Show all

குளங்களைத் தூர்வாருவதாக தி.மு.க. விளம்பர அரசியல் நடத்துகிறது: ராமதாஸ் பேச்சு

கோவில் குளங்களைப் பார்த்து தூர்வாருவதாக ஒருவர் நடிப்பு கொடுக்கிறார். அதை பரபரப்பாக பேசுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை நாங்கள் தூர்வாரி இருக்கிறோம். விளம்பரத்துக்காக எதையும் செய்யக்கூடாது. மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டும். பல திட்டங்களில் பா.ம.க.வை தி.மு.க. நகலெடுக்கிறது.

     பா.ம.க.வுக்கு விளம்பர அரசியல் தெரியாது. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். ஒரு குளத்தை தூர்வாருவது போல் ஸ்டாலின் போஸ் கொடுத்து மிகப் பெரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

     ஆட்சிக்கு வராத நாங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை தூர் வாரி இருக்கிறோம். இது மக்கள் பணி. அரசியல் கட்சிகளின் சமூகப்பணி.

     தூர்வாரப் போவதாக கூறுகிறார்களே தமிழ் நாட்டில் எவ்வளவு ஏரி, குளங்கள் இருந்தன. இப்போது எவ்வளவு இருக்கிறது என்பது தெரியுமா? தூர்வாருவது எப்படி என்பதாவது தெரியுமா?

     தமிழ் மன்னர்கள் ஆண்ட காலம் முதல் 42000 ஏரி, குளங்கள் இருந்தன. ஆனால் இப்போது மக்களாட்சியில் பலஆயிரம் ஏரி, குளங்களை காணவில்லை. இதற்கு காரணம் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் தான்.சென்னையில் நேரு அரங்கம்; வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம் அனைத்தும் மிகப்பெரிய ஏரிகள் இருந்த இடம். இதே போல் பல மாவட்டங்களில் ஏரி, குளங்களைத்தான் ஆட்சியர் அலுவலகங்கள், பேருந்து  நிலையங்களாக கட்டினார்கள். இதுதான் நாட்டை வளர்ச்சி அடைய வைத்த லட்சணமா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.