பிரதமரை சந்தித்தது
பன்னீர் அணி. முதலில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் மூவர் மட்டுமே டெல்லிக்கு போவதாக
முடிவு செய்யப்பட்டிருந்தது. நடுவண் அமைச்சரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்து
முகமாகத்தான் டெல்லி பயணமே முதலில் திட்டமிடப்பட்டது. அப்படியே பிரதமரை சந்திப்பது
என்பது முடிவு. அதற்காக 18 ந்தேதி மாலையிலிருந்து முயற்சிகள்
எடுக்கப்பட்டன. 19 ந்தேதி மாலையில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக மைத்ரேயனுக்கு
தகவல் தந்தது டெல்லி. இந்தநிலையில், நடுவண் அமைச்சரின் உடல் மும்பைக்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும்
தாங்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பில்லை என்பதையும் மைத்ரேயன் அறிந்துகொண்டார். ஆக, அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில்,
பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதை அறிந்து தாமும் செல்வது என திடீரென முடிவு
செய்தார் பன்னீர். நாம் போகவில்லையெனில் வேறுவித செய்திகள் பரவும் என யோசித்தே டெல்லிக்கு
போவது என பயணப்பட்டார் பன்னீர். ஆனால், பன்னீரையும்
அழைத்து வாருங்கள் என மோடி தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதனால் தான் கடைசி நேரத்தில்
அவர் இந்த பயணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மோடியைச் சந்திக்கிற வரையில் நம்மை ஏன் அழைத்துவரச்சொல்லியிருக்கிறார்கள்
என்பதை யோசித்தபடியே பன்னீர் இருந்ததால் மோடியை சந்திக்கும் வரையில் அவரிடம் படபடப்பு
இருந்தது என்கிறது டெல்லி தகவல்கள். இதற்குமுன்பு, மோடியைச் சந்தித்த தங்கமணி, பன்னீரைப்பற்றி
நிறைய விசயங்களை போட்டுக்கொடுத்தார். அதனை சரி செய்யவும் எடப்பாடி தரப்பு சொல்வதை நம்பாதீர்கள்
என எடுத்து சொல்லவும் தான் பன்னீர் திடீரென டெல்லி கிளம்பினார். ஆனால், டெல்லியே தன்னை வரச்சொன்னதில் சற்று பதட்டம்
தான் அவருக்கு. அதனால் தான், மோடி
சந்திப்பில், தான் சொல்ல நினைத்ததை பன்னீர் சொல்ல நினைத்த மாத்திரத்தில் அதற்கு பெரியளவில்
கவனம் செலுத்தவில்லை மோடி. மாறாக, இரு தரப்பும் மீண்டும் இணைவதற்கான வழியை
பாருங்கள் என கட்டளை பிறப்பித்திருக்கிறார் மோடி. ஆனால், பன்னீரை தவிர மற்ற மூவர்களும் , சசிகலா
குடும்பத்தை நீக்குதல், ஜெ.மரணத்துக்கு நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ.விசாரணை உள்ளிட்ட
கோரிக்கைகள் நிரைவேறினால் மட்டுமே மக்களும் தொண்டர்களும் ஏற்பார்கள். இல்லையெனில் அரசியல் செய்ய
முடியாது. எங்களையும் சந்தேகப்படுவார்கள் என சொல்லியுள்ளனர். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதத்தையும்
மோடி தரவில்லை
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



