தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் போக்கு வேடிக்கையானது. தங்கள் ஆட்சி செய்யும் போதோ, நடுவண் அரசின், மாட்டு, நோட்டு, நீட்டு, ஐட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதோ- மாநில சுயாட்சியைத் தூக்கிப் பிடிப்பார்கள். நடுவண் அரசு ஆதிக்கம் செலுத்துவதைப் பட்டியல் இடுவார்கள். அடுத்தவர்கள் ஆட்சி செய்யும் போதோ, அடுத்தவர்கள் ஆட்சியின் குற்றங்; குறைகளைப் பெரிது படுத்துவதற்கோ, அடுத்தவர்கள் ஆட்சியைக் கலைப்பதற்கோ, நடுவண் அரசு வேண்டும்! நடுவண் அரசு புலனாய்வுத்;;;;; துறைதான் வேண்டும். இவர்களை நம்பிதான், நடுவண் அரசின், மாட்டு, நோட்டு, நீட்டு, ஐட்ரோ கார்பன் போன்ற ஆதிக்கத்திலிருந்து தமிழகத்திற்கு விடிவு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஒரு நிலையற்ற, நடுவண் அரசுக்கு அஞ்சி, தமிழ்நாட்டு அதிகாரங்களை நடுவண் அரசிடம் கோட்டை விட்டு, அல்லாடிக் கொண்டிருக்கும் அரசுதான் விடாப் பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகளுக்கு, உண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை இருக்குமேயானால், தற்;;;போது தலையாய பிரச்சனைகளாய் இருப்பவை தமிழ் மக்களுக்கு எதிரான நடுவண் அரசின் பொறுப்பற்ற திட்டங்களே என்பதை உணர்ந்திருக்குமேயானால், அந்தப் பொறுப்பற்;;ற திட்டங்களை நடைமுறை படுத்துவதற்கு நடுவண் அரசின் துணிச்சலுக்கான காரணம், தமிழக ஆட்சியாளர்களுக்கு நடுவண் அரசின் மீது இருக்கிற அச்சமே என்ற நிலையில், ஒன்று தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அல்லது தமிழக அரசே பதவி விலகு! தமிழக மக்களால் உருவாக்கப்படும் வலுவான அரசு (வேறொரு அரசோதான், புதிய அரசோதான் அல்;ல. வலுவான அரசு) அமைய தேர்தல் நடத்து என்றே போராட்டம் நடத்தவேண்டும். எதிரி நடுவண் அரசு! எதிரியிடமே- பெரும்பான்மை இல்லை ஆட்சியைக் கலை. செயலலிதா மரணத்தில் மர்மத்தைக் கண்டு பிடித்து ஆட்சியைக் கலை என்று ஒரு சாரார் முறையிடுவதும், பெரும்பான்மைக்கு எதிரானவர்கள் மீது வழக்கு போடு; நெருக்கு. ஆளுநரை தமிழகத்திற்கு அனுப்பாதே. எதிர்கட்சிகள் மீது சட்டமன்ற விதி மீறல், தேசத்துரோகம் என்று ஏதாவது கற்பி, ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்று மற்றொரு சாரார் முறையிடுவதும், நடுவண் அரசின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவது தான். நடப்பு முயற்சிகள், நடுவண் அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிரானதல்ல
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



