Show all

கபில் தேவ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடிக்கும் ரன்வீர் சிங்

இந்தியில் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கையை முன்வைத்து திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. இதில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை கபீர் கான் இயக்கவுள்ளார். 

இந்த படத்திற்கு 1983 என்று பெயரிடப்பட்டுள்ளதால், இந்தியா 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.