Show all

அறங்கூற்றுமன்ற அவதூறு வழக்கு! நான்கு கிழமைக்குள் நேரில் அணியமாக எச்.ராஜாவுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா உயர்அறங்கூற்று மன்றத்தைத் தரக்குறைவாக பேசியுள்ளார் என ஒட்டு மொத்த தமிழகமும் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து உயர்அறங்கூற்று மன்றத்தை தரக்குறைவாக விமர்சித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ராஜசேகர் என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளார். வழக்கை ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுவர் சி.டி செல்வம் அடங்கிய அமர்வு நான்கு கிழமைக்குள் எச்.ராஜா நேரில் அணியமாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,913.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.