Show all

பேரறிமுக இயக்குநர் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டுள்ளாரா!

ஆம். நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் கொரோனா எச்சரிக்கை அறிக்கை ஒட்டியுள்ளனர்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனாஆட்சிமையால் சிவப்பு மண்டலமாகிவிட்ட சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார். மாவட்ட எல்லையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர். இருப்பினும் கொரோனா அதிகம்  பாதித்துள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து அவர் வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் கொரோனா எச்சரிக்கை அறிக்கை ஒட்டியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.