மோடியும், அமித்சாவும் கிருட்டிணரும் அர்ச்சனரும் போல அவதாரங்கள் என்ற, இரஜினியின் செய்தி குறித்து சீமானிடம் கேட்கப் பட்ட போது அவர் அளித்த நறுக்கு தெரித்தார் போன்ற விடை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,242.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமை அமைச்சர் மோடியும், அமித்சாவும் கிருட்டிணரும் அர்ச்சனரும் போல அவதாரங்கள் என்று இரஜினிகாந்த் தெரிவித்திருப்பது குறித்து சீமான் அவர்களிடம் கருத்து கேட்ட நிலையில், அவதாரங்களாக அப்பறம் இருங்கள் முதலில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும், அமித்சாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தமிழகத்தை பாதிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



