தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் இயங்கலையில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறந்தால் பாதிக்கும் எதிர்மறைத் தாக்கம் உள்ள மதுக்டைகளையும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்கள் திறந்தன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று முந்தாநாள் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து குடியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் இயங்கலையில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் அறங்கூற்றுமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. சமூக ஆர்வலர்களும், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்த வகையிலும், எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்ளை நடத்த திட்டமிட்டிருக்கிற வகையிலும், சமூக விலகல் கடுமையாக பாதிக்கப்படலாம் என்கிற நிலையில் சென்னை அறங்கூற்றுமன்றத்தின் இந்த அதிரடி, தமிழகத்தின் என்பது விழுக்காடு மக்களால் வரவேற்கப்படுகிறது.
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்களின் தொழில், வருமானத்தை ஊரடங்கு பெரிதும் பாதித்துவரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



