Show all

கபிலன் வைரமுத்துவுக்கு விருது! ஏந்திரு அஞ்சலி ஏந்திரு, மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான பாடலுக்காக

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக, ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற செவ்வாய்க் கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உருசிய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.