Show all

கிஞ்சித்தும் கலக்கமடையாத தினகரன்! தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அது வெற்றிச் சின்னம்தான்

தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அது அமமுகவின் வெற்றிச் சின்னமாகத் தான் இருக்கும் என்று அமமுகட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுகவைப் பொறுத்த வரை தனிஅடையாளத்திற்காக அமமுகவே யொழிய அது அதிமுக சசிகலா அணிதான். எடப்பாடி-பன்னீர் அணியிடமிருந்து அதிமுகவை மீட்பதுதான் தினகரன் தேர்தல்சிகிச்சையாகும். 

தேர்தல் ஆணையத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில் அமமுகவிற்கு தொடர்ச்சி கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சமையல்குடுவை சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்க முடியாது என்பது தேர்தல் ஆணைய நிலைப்பாடு. 

இதனைத் தொடர்ந்து அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் புதிதாக ஒதுக்கும் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கீடு செய்யலாமே என்பது உச்சஅறங்கூற்றுமன்ற நிலைப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவும். 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் பொதுச் சின்னம் ஒதுக்கும்படி உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு உறுதியாக ஏதேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கும். சமையல்குடுவை சின்னம் கிடைக்காததால் தங்களுக்கு எந்தவொரு பின்னடைவும் ஏற்படப்போவது கிடையாது. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தமிழக வாக்காளர்கள் வெற்றிச் சின்னமாக மாற்றுவார்கள். புதன் கிழமை முதல் சென்னை ராயபுரத்தில் இருந்து தேர்தல் கருத்துப் பரப்புதலைத் தொடங்க உள்ளேன். தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் அமமுக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறுவோம்.

அமமுக வேட்பாளர்கள் 59 பேர்கள்தாம் தமிழ்நாட்டு மக்களின் ஆயுதம். தமிழகத்தில் குடிஅரசுக்கு எதிரான விரோதிகளை 59 வேட்பாளர்களும் வீழ்த்துவார்கள். 

59 சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட வெற்றி பெறுவார்கள். தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தை ஒதுக்கினாலும், அது அமமுகவின் வெற்றிச் சின்னமாகத் தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.