25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தை நான்தான் ஆள வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும். அந்த வகையில் என் அண்ணன்களான அன்புமணி, திருமாவளவன் ஆளட்டும் என்றுதான் சொல்கிறேன், என்று மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் சீமான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிறார்கள். இந்த உலகத்துக்கத்துக்கே ஆளும் முறையை கற்றுக் கொடுத்த பெருமைவாய்ந்த பாரம்பரியம் உடையவன் தமிழன். அத்தகைய மாநிலத்தை ஆள நம் தமிழர்கள் யாருமே இல்லையா? காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை, ஒகி புயலால் பாதிப்பு ஏற்பட்ட போதும் இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள். ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று அவர் சொல்கிறாரே. சிஸ்டம் என்றால் என்ன? அதனை தெளிவாக சொல்லச் சொல்லுங்கள். இதனை ஏன் ஜெயலலிதா இருந்தபோது சொல்லவில்லை. நான்- ரஜினி, கமல் என அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரையும் எதிர்க்கவில்லை. என் தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும். அந்த வகையில் என் அண்ணன்களான திருமாவளவன், அன்புமணி, ஈஸ்வரன் ஆளட்டும். நான் மகிழ்ச்சி அடைவேன். அதை விட்டுவிட்டு மற்ற மாநிலத்தவர்கள் ஆள நினைத்தால் நான் ஒரு போதும் விடமாட்டேன். என்றார் கொதிப்புடன். நீண்ட நெடுங்காலமாக தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்று தமிழர்களால் மட்டுமேதாம் ஆளப்பட்டு வந்தது. நாடு பிடிக்க, வடஇந்தியாவில் போரை முன்னெடுத்து, மகாபாரதம் என்று இன்று வரை பெருமை பேசிக்கொண்டிருக்கிற ஆரியர்கள், தமிழகத்தில், கூடி குலம்கொடுக்கும் சூழ்ச்சியைத் தான் முன்னெடுத்து வென்றார்கள். அயலவர்களை ஆள அனுமதிக்க மறுப்பது தமிழர் பேராண்மைதான்; பிறழ்வு ஒன்றும் இல்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,691
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



